வேளாங்குளம் புஞ்சைக்காடு

    அமைவிடம் - வேளாங்குளம் புஞ்சைக்காடு
    ஊர் - வேளாங்குளம் புஞ்சைக்காடு
    வட்டம் - காளையார் கோவில்
    மாவட்டம் - சிவகங்கை
    வகை - கல்வட்டம்
    கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், முதுமக்கள் தாழி
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    மத்தியத் தொல்லியல் துறை

    விளக்கம் -

    சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள காளையார் கோவிலிலிருந்து சிலுக்கம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள வேளாங்குளம் என்னும் சிற்றூரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான கல்வட்டங்களும், முதுமக்கள் தாழிகளும் காணப்படுகின்றன. . 5 மீட்டர் முதல் 12 மீட்டர் விட்டம் வரை உள்ள கல்வட்டங்கள் இந்த பகுதியில் காணப்படுகிறது.

    ஒளிப்படம்எடுத்தவர் - திரு. இரமேஷ்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
    சுருக்கம் -

    காளையார்கோவிலிருந்து சிலுக்கப்பட்டி செல்லும் சாலையில் வேளாங்குளம் என்னும் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தின் வயல்வெளியை அடுத்த புஞ்சைக்காட்டுப் பகுதியில் பெருமளவில் இந்த கல்வட்டங்கள் இருக்கிறது. இங்கிருந்து ஆரம்பித்து 5 கி.மீ. தொலைவில் உள்ள நல்லேந்தல் பகுதி வரை இவை நீள்கிறது. இந்த கல்வட்டங்களின் முடிவில் பெருமளவில் முதுமக்கள் தாழிகளும் உள்ளன.